திங்கள், 24 அக்டோபர், 2016

மாணவர்களின் கற்றல் அடைவு மட்டத்தை உறுதிப்படுத்தலும் அதற்கான தேவையும் பெ.லோகேஸ்வரன் மாணவர்களின் அடைவுகளில் ஏற்றத்தாழ்வுகள் என்பது இன்றைய மாணவர் சமூகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளதை அண்மைக்கால பெறுபேறுகளின் மூலம் வெளிப்படையாகக் கண்ட உண்மையாக இருக்கின்றது. பரீட்சைகள் மாணவர்களின் அறிவு, திறன்,மனப்பாங்கை அளவிடும் அளவுகோலாக இதுவரை காலமும் கருதப்பட்டுவந்தாலும் அண்மைக்காலமாக எழுந்த கல்வி அடைவின் மாற்றுச் சிந்தனைகள் பாடசாiலைச் சமூகத்தின் செயற்பாடு, நடவடிக்கைகள் என்பனவற்றை சமூகம் விமர்சனம் செய்யத் தளைப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. இலங்கையின் கல்வித் துறை அபிவிருத்திக்காக பாரிய அளவு முதலீடுகளைச் செய்தாலும் ஒப்பீட்டளவில் மாணவர்களின் தேர்ச்சிகள் அளவீட்டு ரீதியிலும் பண்பு ரீதியிலும் எதிர்பார்த்த அல்லது தேவையான அளவு குறித்த மட்டத்தை அடையவில்லை என்பத கல்வித்துறையினரின் நியாயமான ஆதங்கமாக வெளிப்பட்டுள்ளது. சுமார் ஐந்து வருடங்கள் கல்வி கற்று தரம் 5 கற்று புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவனும், 11வருடம் கல்வி கற்று க.பொ.த சாதாரண தரத்தில் ஆகக்குறைந்தது தாய்மொழி, சமயம், விரும்பிய ஒரு பாடம் உட்பட மூன்று திறமைச்சித்தியையும் கணித பாடம் உட்பட வேறு மூன்று பாடங்களில் சாதாரண சித்தி பெற்று மொத்தமாக 3ஊ யையும் 3ளுயையும் பெற முடியாத மாணவர்களின் கற்றல் அடைவுகளின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து உயர்தரம் கற்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதுபற்றி கல்வியியலாளர் ஒருவர் குறிப்பிடுகையில் பௌதீக ரீதியிலான மாற்றம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் என்பன போன்று கல்வித் துறையில் முக்கிய அங்கமாக விளங்கும் ஆசிரிய வளத்தின் தரம் மேம்படுகின்றதா என்பது கவனத்தில் கொள்ளல் அவசியமென்கின்றார். பொதுவாக பாடசாலைகள் மாணவர்களைப் பற்றிய கணிப்பீட்டை வகுப்பறையில் உள்ள வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், பாட இணைப்பாளர்கள், பகுதித் தலைவர்கள், உதவி அதிபர்கள், பிரதி அதிபர்கள், அதிபர்கள் உள்ளடங்கிய பாடசாலைக் கற்பித்தல் சமூகம் மாணவர் தொடர்பான சுய ஆய்வு, மதிப்பீடு, எண்ணம் என்பன பெரிதும் கற்பித்தலில் மாணவர்களை தாக்கமுறச் செய்கின்றன. கற்பித்தலில் ஈடுபடும் அனைவரும் இதனை நன்கறிவர். மதிப்பீடு எனும் போது மாணவனின் தனித்துவமான திறன் சார்ந்ததாகவும் குடும்ப அலகு சார்ந்ததாகவும் ஆசிரியர்கள் அவதானிப்பதுடன் எண்ணம் சார்ந்ததையும்; தனித்துவமாகவும் குடும்ப அலகுடன் சேர்த்து அவதானிப்பது நமது கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களின் அன்றாட நடவடிக்கையாக அமைந்துள்ளதையும் காணலாம். ஒரு பாடசாலையில் ஆசிரியர் - மாணவர் கற்றல் கற்பித்தலின் அடிப்படையிலும் ஆசிரிய மாணவர் உறவும் பாடசாலைகளின் அடைவுகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்துவதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பாடசாலைகளில் காணப்படும் வளங்கள் எந்த அளவு உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றது? ஆசிரியர்கள் அது தொடர்பான தேர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றார்களா? அவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் எந்தளவிற்கு அதனை மாணவர்களுக்கு வழங்குகின்றார்கள் என்ற தொடர்மதிப்பீடுகளை பாடசாலை முகாமைத்துவக் குழு, வலயக் கல்விப் பணிமனை, மாகாணக் கல்வித் திணைக்களங்கள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இன்று குணநல உள்ளீட்டுக்காக அதாவது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மாணவருக்கு ஒரு தொகை என ஒதுக்கப்பட்டு வருடந்தோறும் பெருமளவு பணம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் பாடசாலைக்குத் தேவையான நூலக வசதி, கணணி வசதி, நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், இணையவசதி, கற்பித்தல் மின்னணுச் சாதனங்கள்,பௌதீகவளங்கள் எனப் பெரும்பாலும் இலங்கையிலுள்ள 70 சதவீதமான பாடசாலைகளில் இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இத்தனை வசதிகளும் இருந்தாலும் மாணவர் மையக் கல்வி என்ற நிலைப்பாடும் ஆசிரியர் ‘வகுப்பறை வசதியீட்டாளர்’ என்ற நிலைப்பாடும் அவ்வப்போது சில சந்தர்ப்பங்களில் கற்பித்தலில் தலைகாட்டினாலும் இன்னமும் ஊhயடம யனெ வுயடம ஆநவாழன தான் காணப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். எமது நாடு 2006ஆம் ஆண்டில் அதி உயர்ந்த எழுத்தறிவு விகிதமாக 92மூ உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையிலும் நாம் ஜப்பானுக்கு இரண்டாவது இடத்திலே உள்ளோம். இன்றைய பரீட்சை அடைவுகளின் ஏற்றத்தாழ்வுகள் மாணவர்கள் கற்றலில் மீதுள்ள நம்பிக்கையை இழக்கும் வகையில் அவர்களால் பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள் வெளியானதும் நெருக்கடிக்குள்ளான மனநிலையில் செய்து கொள்ளும் தற்கொலைகள் அல்லது வெளிவராத தற்கொலை முயற்சிகள் அல்லது அந்தப் பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரீட்சைத் தோற்றுனர் தொடர்பான குடும்ப அலகின் செயற்பாடுகள் காரணமாக அமைவதாகக் கருதமுடியும். பரீட்சை என்பது மாணவனின் அறிவு, ஆற்றலை அளவிடும் ஒரு கருவியாக கருதுவதால் பரீட்சைத் தோல்வி என்பது ஒரு மாணவனை அறிவாளியாக அல்லது முட்டாளாக அல்லது இயலாமை உள்ள மாணவனாக அடையாளப்படுத்துவதாக மாணவர்கள் பலர் கருதுவதாக வரும் செய்தியையும் நாம் அலசத்தான் வேண்டும். கல்வியியலாளர்களால் வரையறை செய்யப்படும் பாடவிதானம் ஆசிரியர் - மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் எவ்வகையில் முழுமையாக அரங்கேற்றப்படுகின்றது என்பதை அவதானிக்க தரமுள்ள மதிப்பீட்டாளர்களாக ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி அதிகாரிகள் முனைப்புக் காட்ட வேண்டும். இலங்கையில் அவதானிக்கக் கூடிய ஆண்டாக 2006ஆம் ஆண்டை கவனத்திற்கொள்ளும்போது அரசாங்கப் பாடசாலைகளில் சேர்க்கப்பட்ட 322,431 மாணவர்கள் ஆகும். இதே ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 439,420 மாணவர்கள் பரிட்சைக்கத் தோற்றி உள்ளனர். இவர்களில் உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 201,398 ஆகும். பல்கலைக்கழகத்திற்கு பிரவேச அனுமதி கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கையாக 16,598 மாணவர்களே தகுதியடைந்ததாக புள்ளி விபரம் தருகின்றது. இதனடிப்படையில் இந் நாட்டில் பல்கலைக்கழகத்தை எட்டிப்பிடிக்காத இலட்சக்கணக்கான மாணவர்கள் பரீட்சையில் தோற்றதை வாழ்க்கையில் தோற்றதாக நடைமுறை வாழ்க்கையில் எண்ணுவதாகத் தோன்றுவதை கல்விப்புலம் சார்ந்தோர் தரும் கருத்தையும் சுட்டிக்காட்டவேண்டும். இன்றைய பாடசாலை நாட்களில் ஒரு பாடசாலை விஞ்ஞாபனத்தில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை முன்னெடுக்க முடியாமல் பல்வகை விடுமுறைகள் தாக்கம் செலுத்துகின்றன. அன்றாட அரச கடமைகளின் நிமித்தம் மூடப்படும் பாடசாலைகள் என்னதான் மீள அந்த விடுமுறைக்கான பதில் பாடசாலைகள் நடத்தப்பட்டாலும் ஒழுங்கு முறையாக தொடரும் பாடசாலை நாட்களின் கற்பித்தல் நடவடிக்கைகளைப் போல விசேட நாட்களின் கற்றல்-கற்பித்தல் செய்றபாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாத நிலையே இருப்பதாக அனுபவங்களினூடாக அறியலாம். பெரும்பாலும் பாடசாலை மாணவர்களின் கற்றலைச் சூறையாடும் விடயங்களாக தேர்தல், பரீட்சை மதிப்பீட்;டு நிலையங்கள், வெளிநாட்டு முக்கியஸ்தர்களின் விஜயங்கள், பண்டிகைகள், விழாக்கள் என்பனவற்றோடு உள்ளகப் பாடசாலை நடவடிக்கைகளில் இடம்பெறும் சமய விழாக்கள், பூஜை நிகழ்வுகள், சுற்று நிருபத்திற்கமைவாக வரும் விழாக்கள் ( பல்வேறு அமைச்சுகளினூடாக) , விளையாட்டு விழாக்கள் உட்பட பல வைபவங்களும் கற்றலுக்கான நேரத்தை வீண் விரயம் செய்கின்றன. மேலும் பாடசாலைகள் அமைந்த சூழலும் பெரும்பாலும் கற்றலுக்கானத் தாக்கத்தை அதிகம் செலுத்துவதையும் அவதானிக்கலாம். இதற்கப்பால் ஒவ்வொரு பாடசாலையும் சந்திக்கின்ற மிக விசேடமானப் பிரச்சினையாக ஆசிரியர்களின் விடுமுறையைக் கருத முடியும். ஒரு ஆண் அசிரியருக்கு வழங்கப்படும் 41 நாட்கள் விடுமுறையும் பெண் ஆசிரியைகளுக்கான 41 நாட்கள் விடுமுறையும் பிரசவ விடுமுறைகளும் மாணவர்களின் கற்பித்தலில் பெரும் பாதிப்பபைத் தருகின்றன. குறிப்பிட்ட ஒரு பாடசாலைக்கு சுற்றுநிருபத்திற்கமைவாக நியமனஞ் செய்யப்படுகின்ற ஆசிரியை ஒருவர் பிரசவ விடுமுறை அதன் பிறகு சுயவிருப்பில் சம்பளமற்ற அல்லது அரைச் சம்பளத்தில் விடுமறை பெற்றுக் கொள்வதால் ஒரு மாணவன் ஆகக் கறைந்தது ஒருவருடம் குறிப்பிட்டப் பாடத்தைக் கற்க முடியாதவனாக மாறிவிடுகின்றான். இந்நிலையில் மாணவர்களின் அடைவுகளில் இத் தாக்கத்தை எவ் வகையிலும் நீக்க முடியாதது வேதனைக்குரிய விடயமாகும். ஆனால் சில மனிதாபமுள்ள ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை இலவசமாக நடத்தி பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதையும் பாராட்ட வேண்டும். எழுத்தறிவு உலகம் எனும் விடயம் தற்போது மாறி இலத்திரனியல் யுகத்தின் எழத்தறிவு ( னுபைவையட யுபந டுவைநசயஉல) அனைவராலும் கவனிக்கப்படுவதும் அது மாணவர் சமூகத்தின் அடைவுகளில் ஏற்றத் தாழ்வுகளில் எவ்வகையில் தாக்கம் செலத்தும் என்பதை அனைவரும் அறிய வேண்டியதும் கட்டாயமாகும். அடிப்படை அறிவு ( டீயளiஉ டவைநசயஉல), விஞ்ஞான எழுத்தறிவு ( ளுஉநைவெகைiஉ டுவைநசயஉல) பொருளாதார எழுத்தறிவு ( நுஉழழெஅiஉ டுவைநசயஉல), தொழில் நுட்ப எழுத்தறிவு (வுநஉhniஉயட டுவைநசயஉல), தகவல் எழுத்தறிவு (ஐகெழசஅயவழைn டுவைநசயஉல), பல் கலாசார எழுத்தறிவு ( ஆரடவiஉரடவரசயட டுவைநசயஉல), உலக அறிவு ( புடழடியட யுறயசநநௌள) என இவை சுமார் 22 திறன்களை நோக்கிச் செல்கின்றது. இன்னமும் நாம் எழுத்தறிவு விகிதத்தை மே;படுத்தியிருப்பதாக் கருதினாலும் மாணவர்களிடையே உள்ள வாசிப்புத்திறன். கிரகித்தல் ஆற்றல்,எழுத்தாற்றல் குறிப்பிடப்படக் கூடிய அளவு முன்னேற்றம் அடையாமல் இருப்பதையும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலிருந்து அறிய முடியும். மாணவர்களின் அடைவுகளின் எற்றத்தாழ்வுகளில் ஆசிரியர்களின் மனோநிலையும் அதிகம் தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஒரு வகையில் மறைமுகமான கல்வித் தீண்டத்தகாமை கொள்கையும் மாணவர்களின் அடைவுகளில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் காலத்திற்கும் காலம் நடை,உடை,பாவனையில் வித்தியாசங்களைக் கைக் கொண்டுவருவதும் மணாவர்களின் கற்றலில் பாதிப்பைத் தோற்றுவித்துள்ளதாக மரபு வழிவந்தோர் கருதுகின்றனர். 1940 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் கடமையாற்றிய பெரும்பாலான ஆசிரியர்கள் தேசிய உடைகளிலும் ஆசிரியைகள் சேலை உடுத்தியும் சிறந்த ஒழுக்கமும் முறையான பயிற்சிகளையும் கொண்டவர்களாகவும் 1970 தொடக்கம் 1980 சாலப்பகுதிகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள் தேசிய உடைகளை அணிந்த சில ஆசிரியர்களே காணப்பட்டதாக அறிய முடிகின்றது. இதற்குப் பின்னர் வந்த ஆசிரியர்களின் செயற்பாட்டில் பாரிய வித்தியாசங்கள் எழுந்தமையாகவும் அது கற்றல் நடவடிக்கைகளில் பெரிய தாக்கத்தினையோ அல்லது மாறுதலையோ கொண்டமைந்ததாகக் கருத இடமுண்டு. ஆசிரியர்களின் அன்றாட செயற்பாடு, தியாகம்,ஆற்றல், ஆளுமை என்பன மாணவர்களின் அடைவுகளில் தாக்கத்தை செலுத்துவதை எவராலும் மறுப்பதற்கில்லை. வந்தோம் கடமையை முடித்தோம் என காலை 7.30 மணிக்கு வரும் ஆசிரியர்கள் சிலர் பிற்பகல் 1.30 மணியுடன் தமது கடமையை நிறைவுறுத்திக் கொண்டு வீடு புறப்படத் தயாராகுவதும் மிகப் பெரிய தாக்கத்தை அடைவுகளில் ஏற்படுத்துகின்றது. சில ஆசிரியர்கள் பிற்பகல் 12.00 மணிக்குப் பிறகு தமது கற்பித்தலில் தொய்வை ஏற்படுத்திக் கொள்வதும் பாடசாலைகளின் அடைவுகளில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. எனினும், உரிய பொறுப்பு, கடமை, ஆர்வமான கற்பித்தல் செயற்பாடு, நவீனத்துவ மின்னணுச் சாதனங்களினூடாக கற்பித்தல், தியாகம், மாணவர் பற்றிய புரிந்துணர்வு என்பன மிகையாகக் கொண்ட ஒரு ஆசிரியர் பரம்பரையும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றது ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலையையும் வீட்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் பாடசாலைகள் அடைவுகளில் இறங்குமுகத்தைச் சந்திக்கக் காரணமாக அமைகின்றன. ஒரு பாடசாலையில் ஒரு மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளுக்கு 200 புள்ளிகளைப் பெற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் ஒன்பது பாடங்களிலும் 9 யு சித்திகளைப் பெற்றால் அது அந்த ஆசிரியருக்கான அடைவு வெற்றியாகக் கருதி விழா எடுக்கும் பாடசாலைகளையும் பார்க்கின்றோம். ஆனால், அதே பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குக் குறைவாகவும் ஒன்பது பாடங்களிலும் சித்தியடையத் தவறிய அல்லது க.பொ.த உயர் தரத்திற்குக் குறைந்த பட்ச தகுதியான 3 ஊ உட்பட 3 ளு சித்திகளை கணிதப் பாடத்துடன் பெறத் தவறும் மாணவர்களின் நிலைக்கு யார் காரணம் என கைவிடுவது என்பது புரியாத அல்லது புரிந்தும் புரியாத செயற்படவோ பாடசாலைச் சமூகம் பார்ப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். சிறந்த பெறுபேறை தமது என உரிமை கொண்டாடும் ஆசிரியர்கள், அதிபர்கள் சிலர் சித்தியடையாத மாணவர்களின் பெறுபேற்றையும் தமதாகவே கருத வேண்டும் என்கிற போது அதற்கு எவரும் தலைசாய்ப்பதில்லை. ஒரு தோழமைமிக்க ஆசிரியரால் மாணவர்கள் மனதை வென்று அவர்களை பரீட்சையில் சோபிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ள கல்வியியலாளர்களும் உள்ளனர். கற்பித்தலை ஒரு கடமையாக மட்டும் மேற்கொள்வதைவிட்டு அதற்கும் மேலாக அவர்களது அடைவு இலக்கையும் அறிவு, ஆற்றலை மேம்படச் செய்யும் தூண்டலும் பரீட்சை பற்றிய இலக்கை எளிதாக எட்ட முடியும். ஆசிரியர் ஒரு பயிற்றுனராகவும் (ஊழயஉh), உள்ளடக்கத்தினi ஆக்குபவர் (ஊழவெநவெ ஊசநயவழச), ஆலோசகர் ( ஆநவெழச), முகாமையாளர் (ஆயயெபநச),இணைந்து கற்பவர் ( குநடடழற டுநயசநெச) ஆகிய வகிபாகங்களை சிறப்பாகச் செய்வதும் அவசியமாகும். மாணவர்களது கற்பித்தலை மட்டும் ஆசிரியர்கள் கருத்தாகச் செய்வதைக் கருத்திற் கொள்ளாமல் அவர்களது தேர்ச்சிகளையும், அடைவுகளையும் மதிப்பிட ஒரு தொடர் ஆய்வு ஒன்று அவசியமாகின்றது. பெரும்பாலும் பாடசாலைகளில் தவணைப் பரீட்சை, அலகுப் பரீட்சை, பாடசாலை மட்டக் கணிப்பீடு என்பன தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படுகின்றன. அவை பற்றிய பதிவுகள் பேணப்படுகின்றன. மாணவர்களுக்கும் சகல பாடசாலைகளிலும் தவணைப் பரiPட்சை முடிவுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை பிள்ளைகளுக்கு அட்டவiணாயாகவோ பதிவாகவோ வழங்குகின்றர்கள். சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை தேர்ச்சி அறிக்கையாகவே வழங்குகின்றார்கள். எனினும் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடசாலை மட்டக் கணிப்பீடு தொடர்பான அடைவுகள் பதிவுகளாக வழங்கப்படுவதில்லை. பாடசாலை மட்டக் கணிப்பீடு இலங்கையில் பாடசாலைகளில் அமுல்ப்படுத்தும் முன்னதாக தவணைப் பரீட்சைகளின் தேர்ச்சி அறிக்கை மாணவர்களது கற்றல் அடைவுகளில் பாரிய தாக்கத்தையும் ஒரு வித பயத்தையும் கொண்டமைந்திருந்தது. இன்று தரம் 1 முதல் 11 வரை பாடசாலைகளில் மாணவர் வகுப்பு ஏற்றங்கள் என்பன தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சகல பாடங்களிலும் நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் எல்லாப் பாடங்களிலும் மொத்தமாக நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் சித்தியடைய எவ்விதத் தடையுமில்லை. இதுவும் அடைவு மட்டத்தை வெற்றிகரமாக முன்னnடுக்க இயலாமைக்கான ஒரு காரணமாக ஆசிரியர்கள் முன் வைக்கும் விடயமாக அமைகின்றது. தவணைப் பரீட்சை பெறுபேறுகளில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த சித்தியடைந்தார் ஃ சித்தியடையவில்லை என்ற வரிகள் தற்போது இல்லாமல் இருப்பதுவும் கற்றல் அடைவுகளை எளிமைக்குட்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது. எனினும் மாணவர் உரிமை, மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் காரணமாக பரீட்சைகள் தொடர்பான செயற்பாடுகள் தரம் 1 தொடக்கம் 10 வரை முன்னெடுக்கப்பட்டாலும் தரம் 11 இல் க.பொ.த சாதாரண தரத்தில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வைக்கப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையிலும் பாடசாலை மட்டக் கணிப்பீடுகளின் துணையோடு மாணவர்கள் சித்தியடைவதாகக் கருதப்பட்டாலும் பல மாணவர்கள் தேவையான பெறுபேற்றை உரிய முறையில் அடையாமல் திண்டாடுவதையம் அதனால் விரக்திக்குச் செல்லும் நிலையையும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினூடாக வெளிவரும் செய்திகளும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. இத்தனைத் தேர்வுகள், இத்தனைப் பரீட்சைகள் என பலவகை செயற்பாடுகளும் மாணவர்களுடைய அடைவினை உறதிப்படுத்தாமைக்கு பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவற்றை மாணவன் சார்ந்த குடும்பம், மாணவன் சார்ந்த கற்றல்- கற்பித்தல் நடவடிக்கை, ஆசிரியர் - பாடசாலைச் சமூகம் என மூன்று வகையாகப் பிரித்து அவதானிக்கும் போது சில விடயங்களை உணரமுடியும். தாயின் கருவறையிலேயே குழந்தை கல்வி கற்கத் தொடங்குகின்றது என்ற கோட்பாட்டினூடாகப் பார்க்கும் போது சம அளவுடைய வயதுக் குழக்களினூடாக அறிவு, சிந்தனை, திறன் என்பன மாறுபட்ட அளவுகளுடையதாக மாற்றமடைகின்றது. இதனையும் ஒரு குடும்பத்தில் தாய் தந்தையர் கல்வி கற்காவிட்டாலும் முதல் குழந்தை அறிவுபூர்வமாக, சிந்தித்து திறனுடன் செயற்படத் தொடங்கினால் அடுத்துவரும் குழுந்தைகளும் உறவுசார்ந்த குடும்ப அலகின் உறுப்பினர்களுக்குமிடையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தி கல்வி அடைவை உறுதிப்படுத்திய சந்தர்ப்பங்களை நாம் நடைமுறைச் சமூகத்திலிருந்து காணக் கூடியதாக உள்ளது.மாணவனின் கற்றல் நடவடிக்கையில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக கல்விச் சமூகத்தினரின் செயற்பாட்டில் குடும்ப அலகு கருதப்படுகின்றது. இது எந்த அளவிற்கு பொருத்தமானது என்று சரியாக விதந்துரைக்க முடியாவிட்டாலும் குடும்ப அலகின் செயற்பாடுகள், பெற்றாரின் செயற்பாடுகள் எனபனவற்றைப் புறந்தள்ள முடியாது. மாணவர் சார்ந்த கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசாங்கப் பாடசாலைகளில் மிகவும் நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை மதிப்பிடுவதற்கு ஆளணி முகாமைத்துவத்தின் கீழ் கோட்டக் கல்விக் காரியாலயங்கள்,கல்வி வலயங்கள், மாகாணக் கல்வி அமைச்சுகள் என்பன திருப்திகரமான நடவடிக்கைகள் முன்னெடுத்தாலும் போதுமான ஆளணிப் பற்றாக்குறை பல கல்வி வலயங்களில் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதகமாக அமைகின்றன. மாணவர் தொகை, பாடசாலைகளின் தொகை, பாட அடிப்படை, முகாமைத்துவம் தொடர்பாக போதுமான நிர்வாகத் திறன்மிக்க ஆளணிப் பற்றாக்குறையும் பெரும் பாதிப்பாக அமைகின்றன.எவ்வாறாயினும் திட்டமிட்ட பாட விதானங்கள் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஒழுங்கமைந்த கோலங்களாக எழும்போது ஏற்படும் கல்வி மாற்றங்களை சமூகத்தில் கல்வியால் உயர்ந்த சாதாரண பாடசாலைகளின் அடைவுகளில் இருந்து அறிய முடிகின்றது. மூன்றாவதாக ஆசிரியர் பாடசாலைச் சமூகம் தொடர்பான செயற்பாடுகளும் மாணவர்களது கல்வி முன்னேற்றங்களிலும் அடைவுகளிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன. பொதுவாக ஒருவர் மனப்பாங்கில் இடம்பெறும் Pழளவைiஎந வுhiமெiபெஇ நேபயவiஎந வுhiமெiபெ என்பன பல மாணவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உயர்ந்தும் தாழ்ந்தும் மாணவர்கள் செல்வதற்கு வழிசமைத்துள்ளதை கடந்து வந்த மாணவர்களது வாழ்க்கை எடுத்துக்காட்டும் படிப்பினையாகும். ஒரு மாணவனை ‘இவன் கெட்டிக்காரன்’ என்று கை கொடுத்தால் அவன் வாழ்வில் நம்பிக்கையையும் வாழ்த்துக்களையும் படிப்பினையாகக் கருதி முன்னேறிவிடுகின்றான். அதேவேளை ‘இவன் உருப்படாதவன்’, ‘ஏன் தான் இவனெல்லாம் பாடசாலைக்கு வருகின்றானோ?’ போன்ற எதிர்மறையான சிந்தனைகளும் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றது. இந்த ஒட்டுமொத்த விடயங்களுக்கப்பால் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளில் எவ்வகையில் ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்வது என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதனைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைளை கல்விச் சமூகம் அவ்வப்போது எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தீர்க்க வழிமுறை சொல்லும் சில ஆய்வு விடயங்களைப் பின்வரும் வழிவகைகளில் பொருத்தமான முiறியல் முன்னெடுத்தால் அவை அடைவுகளின் ஏற்றத்தாழ்வுகளைச் சரிப்படுத்தும் முறையாக அமையலாம். 60 வருடங்களுக்கு முன்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட புறவயச் சோதனைகள் அதற்கு முன்பு காணப்பட்ட பல்வேறு பரீட்சைக் குறைபாடுகளை மாற்றியமைக்க உதவின. கட்டமைப்பு வினாக்களுக்கு புள்ளிகள் வழங்குதல் நம்பிக்கையற்ற ஒரு நிலைமையை காட்டியது. மாணவர்களின் எதிர்காலத்தைத் தீரமானிக்கும் ஒரு பரீட்சையாக க.பொ.த சாதாரண தர பரீட்சைக் காணப்படுவதால் அது பெரும் சர்ச்சையைத் தேற்றுவித்திருந்நதாலும் நமது பரீட்சைகளிலும் அது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது.வினாத்தாளைத் திருத்தும் ஒரு ஆசிரியரின் தனிப்பட்டக் காரணிகள், மதிப்பீடு செய்த நேரம், மதிப்பீட்டுத் திட்டம் என்பன தமது தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஆனால் புறவயச்சோதனைகளில் வழங்கல் முறை, தேர்வு முறை என இருவகைப்படுகின்றன. ஒரு பரீட்சார்த்தியின் வழங்கல் முறை வினாவிற்கு விடை அளிக்கையில் விடையைத் தானே உருவாக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. தேர்வு நிலை வினாக்களுக்கு விடை அளிக்கும்போது பரீட்சகர்களினால் வழங்கப்பட்ட பல்வேற வினாக்களிலிருந்து விடைகளைத் தெரிவு செய்ய முடியும். மாணவர்களை அலகுப் பரீட்சை, தவணைப் பரீட்சை, மாதாந்தப் பரீட்சையில் பல்வேறு அம்சங்களைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அரசாங்கப் பரீட்சைகளுடன் தொடர்புபடுத்துவது மிக முக்கியமாகும். குறுகிய விடை வகை, ஒப்பீட்டு முறை வகைகள்,இருவகை விடை சரிஃபிழை,பல்தேர்வு வினாக்கள் (ஆஊஞ), தொடர்புபடுத்தல், இனங்காணல் முதலிய வினாக்கள் அதாவது கட்டுறு வினாக்கள் தொடர்பான போதிய அறிவு ஆசிரியர்களிடத்தில் இருக்க வேண்டும். பொதுவாக திறந்த கட்டமைப்புச் சோதனையில் சோதனை உருப்படிகளைத் தயாரிப்பது மிக இலகுவானதாகும்.இங்கு பாடவிடயத் தேர்வு மட்டுப்படுத்;தப்பட்டுள்ளது. அறிவையும் விளக்கத்தையும் அளவிடுதல் கட்டாயமாகும். மாணவரின் ஆயத்தமும் இங்கு முக்கியமாகக் கருதப்படுகின்றது. மாணவர் தாங்கள் அறிந்தவற்றை சுலபமாக துலங்கல்களை அமைப்பர். மாணவரின் சரியான விடை ஊகிப்பில் சிறிய பிரச்சினை காணப்படலாம். இது பெரும்பாலும் நேரம் போக்கக்கூடிய, நம்பகத்தன்மை குறைந்ததாகவும் புள்ளி பெறுதல் கடினமாகவும் அமைந்துள்ளது. புறவயச் சோதனையைப்; பொறுத்தவரையில் சோதனை உருப்படிகளைத் தயாரிப்பது ஒப்பீட்டளவில் மிகவும் கடினமானது.பாடவிடயத் தேர்வைப் பொறுத்தவரையில் பாரிய பரப்பளவை பரீட்சிக்கலாம். அறிவையும் விளக்கத்தையும் அளவிடக்கூடிய ஒன்றாக உள்ளது. மாணவருக்கு நுணுக்கமான ஆயத்தங்கள் வலியுறுத்தப்படுகின்றது.மாணவரின் துலங்கல் வழங்கல் வகை வினாக்களைத் தவிர ஏனைய உருப்படிகளை மாணவர் தேர்வு செய்யக் கூடியதாக இருக்கும். மாணவர்கள் சரியான விடை ஊகிப்பைச் செய்வது பெரும் பிரச்சினையாகும். புள்ளிகளை மாணவர்கள் பெறுவது இலகுவானதாகவும் விரைவானதாகவும் நம்பகமானதாகவும் உள்ளது சிறப்பாகும். இலக்கியங்களும் இதிகாசங்களும் நாடுகளும் பரீட்சை அம்சத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே கொண்டிருந்ததாக வரலாறு பகிர்கின்றன. தம்பியரைத் தேடி நச்சுப் பொய்கையை அடைந்த தருமர் பல வினாக்களுக்குவிடையளித்தாக மகாபாரதம் கூறுகின்றது. இதுபோல பெண்களின் கற்பு, அடியார்களின் பக்குவம் உட்பட பலவிடயங்கள் சோதனை செய்யப்பட்ட கதைகள் புராணங்களில் மலிந்து கிடக்கின்றன. சீன தேசத்தில் கூட ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே போட்டிப் பரீட்சைகள் வழக்கில் இருந்ததாக அறியவருகின்றது. மனிதனின் நாகரீகம் தலையெடுக்கத் தொடங்கிய காலம் முதல் இந்தப் பரீட்சைகள் ஏதோ ஒரு வகையில் வழக்கில் அமைந்து வருகின்றன. பரீட்சைகளின் சில வகைகள் கீழே தரப்படுகின்றன. 1 வித்தியா பரீட்சைகள் - ளுஊர்ழுடுயுளுவுஐஊ வுநுளுவுளு 2.வியாசப் பரீட்சைகள் - நுளுளுயுலு வுலுPநு வுநுளுவுளு 3.புதுமுறைப் பரீட்சைகள் - Nநுறு வுலுPநு வுநுளுவுளு 4.நிதானப் பரீட்சைகள் - னுஐயுபுNழுளுவுஐஊ வுநுளுவுளு 5.விவேகப் பரீட்சைகள் - னுநுஏநுடுழுPஆநுNவு ழுகு ஐNவுநுடுடுஐபுநுNஊநு வுநுளுவுளு இவற்றிலிருந்து நமது பரீட்சைகள் முறையில் தாக்கம் செலுத்துபவை பற்றியும் அதேநேரம் பரீட்சைப் புள்ளிகளை அதிகரிப்பதற்கான ஆய்வாக இது இருப்பதால் பரீட்சை முறைகள் பற்றிய ஆய்விலிருந்து விடுபட்டு புள்ளிகள் தொடர்பான பதிதல், ஆய்வு பற்றிய செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். பாடசாலைகளில் தரம் 1இ2இ3இ4இ5இ6இ7இ8இ9இ10இ11இ12இ13 என வகுப்புகளில் அடைவகளை பொதுவாக ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் படிப்படியாக முன்னெடுக்கலாம். ஆனால் இங்கு தரம் 1,2 என்பன பரீட்சைகளின் அடைவுகளில் ஆய்வக்காக விலக்களிக்கப்படுகின்றது. எனினும் தேர்ச்சி ரீதியிலானதொரு ஆய்வுகள் அம் மாணவர்களை நல்வழிப்படுத்தும். அதற்கமைவாக பின்வருமாறு நாம் முன்னெடுக்கும் விடயங்களை அவதானிக்கலாம். தரம் 1,2 – தரம் 3,4,5 – தரம் 5 உடன் தரம் 6,7,8,9,10,11 என் மூன்று அம்சங்களில் இந்த அடைவுகளை மாணவர் உலகிற்குப் பொருத்தமாக தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக பின்வரும் அட்டவணையைக் கவனியுங்கள். இங்கு வழமையாக பாடசாலைகளில் மேற்கொள்ளும் புள்ளிப் பதிவேடுகள் தரும் பதிவுகளாக அமைகின்றன. ளுஊர்ழுழுடு Nயுஆநு:......................................................... புசுயுனுநு..................... ஊடயளள வுநயஉhநச..................................................... Nழு யுனஅளைளழைn ழே Nயுஆநு குஐசுளுவு வுநுசுஆ ளுநுஊஊழுNனு வுநுசுஆ சுநுடுஐபுஐழுN வுயுஆஐடு நுNபுடுஐளுர் ஆயுவுர்ளு ர்ஐளுவுழுசுலு ளுஊஐநுNஊநு டீருஊமுநுவு 1 டீருஊமுநுவு 2 டீருஊமுநுவு 3 சுநுடுஐபுஐழுN வுயுஆஐடு நுNபுடுஐளுர் ஆயுவுர்ளு ர்ஐளுவுழுசுலு ளுஊஐநுNஊநு டீருஊமுநுவு 1 டீருஊமுநுவு 2 டீருஊமுநுவு 3 01 2718 னு.மயஎin 75 80 84 45 67 47 58 47 34 85 33 62 34 36 32 53 46 32 02 2719 ஊ. ஏயசரசெயத 66 68 54 37 60 51 58 64 82 57 65 54 58 71 60 65 49 58 03 2720 டு.வுhiஎநளாமயச 77 68 78 53 63 37 35 38 38 50 49 66 42 40 30 34 42 26 04 2721 ளு.னுடைரளாயn 44 33 18 06 24 21 25 16 27 38 24 19 12 19 21 21 28 27 05 2722 சு.முயதயஅரபயn 62 54 51 16 40 30 31 35 25 54 42 36 26 39 22 34 29 10 06 2723 ஆ.ஊhசைவாழடியச 63 44 31 14 31 26 39 39 35 45 34 20 16 27 27 44 35 33 07 2724 சு.யுவெழn 85 79 88 57 87 80 84 83 84 80 64 56 61 56 69 72 66 81 08 2725 P.ஆ.ஆ.ஆழானைநநn 72 63 48 14 44 34 37 42 76 46 39 45 20 38 25 42 38 54 09 2726 ளு.யுறெயச 78 86 79 47 68 69 64 44 87 70 73 67 71 62 68 57 61 80 10 2729 ஏ.முயறளபையn 71 76 59 56 75 49 57 50 79 65 66 64 59 52 43 49 46 55 இங்கு குறிப்பிடப்பட்ட அட்டவணை ஒரு வழமையான பதிவாகும் ஆனால் இங்கு வருட மதிப்பீடு மட்டுமே கருத்திற் கொள்ளப்படும். இந்நிலையை நாம் பின்வரும் அட்டவணை மூலமாக தரம் 1,2 (பெரும்பாலும் பரீட்சைகள் இடம்பெறுவதில்லை. எனவே, பொருத்தமான தேர்ச்சி நடவடிக்கைகளின் தொடர் மதிப்பீடு), தரம் 3,4,5 ஆகியவற்றிலும் தரம் 6 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களது பரீட்சைப் புள்ளிகளை இவ் வழமையான புள்ளிப் பதிவுகளிலிருந்து எவ்வகையில் தொடர் மதிப்பீடொன்றை மேற்கொள்வது என்பதற்கான மாதிரி செயன்முறைகளை பின்வரும் பதிவினூடாக அறிய முனைவோம். உதாரணமாக 2718 என்ற சேர்வு இலக்கத்தைக் கொண்ட மாணவன் தற்போது தரம் 9இல் கல்வி பயில்கின்றான் என வைத்துக் கொள்வோம். இம் மாணவனின் தொடர் மதிப்பீட்டை எவ்வாறு அளவிடுவது என்பதையும் அதனூடாக முன்னேற்றத்தை எவ்வாறு இட்டுச் செல்வது என்பதையும் அவதானத்திற் கொள்வோம். இம் மாணவன் தரம் 9இல் 2015இல் கல்வி கற்கின்றான். அப்படியாயின் இம்மாணவன் பின்வரும் முறையில் வகுப்புகளைக் கற்று, தொடர்ந்து 10, 11இல் வகுப்புகளில் கற்று க.பொ.த சாதாரண தரத்தை அடைவான். உதாரணமாக இல சேர்வு இல பெயர் ஆண்டு வரிசை 2012 2013 2014 2015 2016 2017 2018 தரம் .............................. பாடம்:.............................................................................................. புலமை 05 06 07 08 09 10 11 தவணை 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 01 2718 னு.முயஎin 80 45 35 37 35 30 33 38 35 32 34 30 32 33 30 34 35 40 32 2012ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 80 புள்ளிகளைப் பெற்றுள்ளான். இம் மாணவன் 2013ஆம் ஆண்டு தரம் 06 இல் கல்வி பயிலத் தொடங்குகின்றான். இவன் 2014,2015,2016,2017 என தரம் 7,8,9,10,11 என்ற அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றத் தயாராகின்றான். இம் மாணவன் கணித பாடத்தில் பெற்ற புள்ளி ஒழுங்குகள் தவணை அடிப்படையில் தரப்பட்டுள்ளது. எனினும், இம் மாணவன் தரம் 06 தொடக்கம் 11 வரை ஆகக் குறைந்த புள்ளியாக 30 புள்ளிகளையும் ஆகக் கூடிய புள்ளிகளாக 45 புள்ளிகளையும் பெற்றுள்ளான். இதனடிப்படையில் இம் மாணவன் 2013 முதல் 2018 வரை 06 ஆண்டுகளில் பெற்ற மொத்தப் புள்ளிகள் 620 ஆகும். 620 புள்ளிகளைச் சம்பாதிக்க இம் மாணவன் 06 ஆண்டுகள் கல்வி கற்று 18 தவணைப் பரீட்சைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. 620 புள்ளிகளை 18ஆல் வகுக்கும் போது இம் மணவனின் 06 ஆண்டுகால தேர்ச்சிப் புள்ளியாக 34.5 புள்ளிகளையே தரம் 11 அரசாங்கப் பரீட்சையில் பெற வாய்ப்புண்டு. அதனடிப்படையில் இம் மாணவன் 80 சதவீதம் பரீட்சையில் சித்தி அடையத் தவறும் மாணவனாகவே உள்ளான்.இதனை மாற்றியமைக்க நம் ஆய்வு எவ்வகையில் பயன்படும் என்பதே இந்த இடத்தில் உள்ள வினா. தரம் 05 இல் இம் மாணவனின் கற்றல் திறன் சராசரி மாணவன் என்ற கற்றல் நிலையிலிருந்து எம் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதைக் கருத முடியும். அப்படியாயின் ஆசிரியர்கள் இம் மாணவனுக்காக எச்சந்தர்ப்பத்திலாவது தமது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார்களா என அவதானித்தால் அவர்கள் எந்த வித அக்கறை ஒன்றையும் காட்டவில்லை என்பதை மேற்படி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாணவன் புள்ளிகளின் அடிப்படையில் 30 தொடக்கம் 45 புள்ளிகளுக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதையே புள்ளிகளின் அடைவுமட்டம் நமக்குத் தருகின்றது. இம் மாணவன் தரம் 06 இல் 45 புள்ளிகளையும் தரம் 11 இல் 40 புள்ளிகளையும் பெற்றுள்ளான். அப்படியாயின் இம் மாணவன் ஒரு இயலாமை உடைய மாணவன் அல்ல. அவன் தொடர் மதிப்பீடொன்றுக்கு உள்வாங்கப்பட்டு விசேட கவனம் செத்தப்படவில்லை என்பதையே இவ் ஆய்வு காட்டுகின்றது. அதனை மீள திருத்தி அமைத்து அம் மாணவனை நம்பிக்கையுடன் வெற்றியை நோக்கிச் செல்ல வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கத் தவறியிருப்பதைக் காட்டுகின்றது. இந்த நிலையில் மாணவனின் அடைவு மட்டங்களை 00 தொடக்கம் 10 புள்ளிகளுக்குள் வரையறுத்தால் 00-03ஐ முதலாவதாக அடைவாகவும் 04 தொடக்கம் 07 வரை இரண்டாவது அடைவாகவும் 08 தொடக்கம் 10 வரை மூன்றாவது அடைவாகவும் எடுத்துக் கொண்டு அடைவு மட்டங்களை 100 புள்ளிகள் வரை கொண்டு செல்ல வேண்டும். இந்த அட்டவணையைப் பாருங்கள்: டுநஎநட ஆயசமள Pசழபசநளள சுயபெந ளுரடி டுநஎநட ஆயசமள சுயபெந சுயபெந புசயனநள 1 10 00-03 டுநஎநட 1 ஊ 00-03 டுழற 04-07 டுநஎநட 1 டீ 04-07 ஆநனரைஅ 08-10 டுநஎநட 1 யு 08-10 ர்iபா 2 20 00-03 டுநஎநட 2 ஊ 11-13 டுழற 04-07 டுநஎநட 2 டீ 14-17 ஆநனரைஅ 08-10 டுநஎநட 2 யு 18-20 ர்iபா 3 30 00-03 டுநஎநட 3 ஊ 21-23 டுழற 04-07 டுநஎநட 3 டீ 24-27 ஆநனரைஅ 08-10 டுநஎநட 3 யு 28-30 ர்iபா 4 40 00-03 டுநஎநட 4 ஊ 31-33 டுழற 04-07 டுநஎநட 4 டீ 34-37 ஆநனரைஅ 08-10 டுநஎநட 4 யு 38-40 ர்iபா 5 50 00-03 டுநஎநட 5 ஊ 41-43 டுழற 04-07 டுநஎநட 5 டீ 44-47 ஆநனரைஅ 08-10 டுநஎநட 5 யு 48-50 ர்iபா 6 60 00-03 டுநஎநட 6 ஊ 51-53 டுழற 04-07 டுநஎநட 6 டீ 54-57 ஆநனரைஅ 08-10 டுநஎநட 6 ஊ 58-60 ர்iபா 7 70 00-03 டுநஎநட 7 ஊ 61-63 டுழற 04-07 டுநஎநட 7 டீ 64-67 ஆநனரைஅ 08-10 டுநஎநட 7 யு 68-70 ர்iபா 8 80 00-03 டுநஎநட 8 ஊ 71-73 டுழற 04-07 டுநஎநட 8 டீ 74-77 ஆநனரைஅ 08-10 டுநஎநட 8 யு 78-80 ர்iபா 9 90 00-03 டுநஎநட 9 ஊ 81-83 டுழற 04-07 டுநஎநட 9 டீ 84-87 ஆநனரைஅ 08-10 டுநஎநட 9 ஊ 88-90 ர்iபா 10 100 00-03 டுநஎநட 10 ஊ 91-93 டுழற 04-07 டுநஎநட 10 டீ 94-97 ஆநனரைஅ 08-10 டுநஎநட 10 ஊ 98-100 ர்iபா இவ் அட்டவணையில் மாணவர்களின் புள்ளிகள் அதிகரிப்பு விகிதத்தை 1 தொடக்கம் 10 வரையில் அதிகரித்துச் செல்லும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை அந்தப் 10 புள்ளிகளும் 3 அதிகரிப்பு அளவு விகிதத்தின் ஊடாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இங்கு யு என்ற மாணவன் 63 புள்ளிகளையும், டீ என்ற மாணவன் 39 புள்ளிகளையும் ஊ என்ற மாணவன் 85 புள்ளிகளையும் எடுத்திருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம்.அதன்படி யு என்ற மாணவன் 6ஆம் வகுதிக்குள் உள்ளடங்குகின்றான். டீ என்ற மாணவன் 3ஆம் வகுதிக்குள் அடங்குகின்றான். உ என்ற மாணவன் 8ஆம் வகுதிக்குள் அடங்குகின்றான். இவர்கள் அந்த வகுதிக்குள் முதலில் கொண்டுவந்த பின் அவர்கள் அந்த வகுதிக்குள் எந்தப் பிரிவில் வருகின்றார்கள் எனப் பார்க்க வேண்டும். யு என்ற மாணவன் 63 புள்ளிகள் என்பதால் அவன் டுநஎநட 7 ஊ என்ற பிரிவிற்குள் அடங்குகின்றான். டீ என்ற மாணவன் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் டுநஎநட 4 யு க்குள் உள்ளீர்க்கப்படுகின்றான். ஊ என்ற மாணவன் 85 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் டுநஎநட 9 டீ யைப் பெறுகின்றான். இங்கு ஒரு வகையில் மாணவனுக்காகப் பாராட்டும் கிடைக்கின்றது. ஒரு டுநஎநட இல் யுஇடீஇஊ என்ற வரையறை செய்யப்பட்டுள்ளதால் அந்த வகுதியில் இறுதி மட்டத்திற்கு வரும்போது தனக்கு ஒரு யு கிடைப்பதாக அவன் எண்ணுகின்றான். அதேபோல டீ கிடைப்பதாலும் தன்னம்பி;க்கை வளர்ந்து தனது அடுத்த கட்டத்திற்கான 3 தொடக்கம் 4 புள்ளிகளைப் பெற்றால் ‘முடியும்’ என்று அதிக ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கிவிடுவான். மாணவனுக்கான கற்றல் அடைவுகளை நேரடியாக 40 புள்ளிகளுக்கு மேல் பெறவேண்டும் என்ற கட்டளையை விட ஆசிரியர் அம் மாணவனின் அடைவுகளின் ஏற்றத்தை குறுகிய புள்ளி ஏற்றங்களாக 3 தொடக்கம் 5 புள்ளிகளுக்குள் வரையறை செய்யும் போது அம் மாணவனால் அதனை இலகுவாக எட்டிப்பிடிக்க முடியும். அதேநேரம் அவ் அடைவுகளை தரம் 3,4,5 ஆக இருக்கும் போது தொடர்மதிப்பீடு , அக்கறை செலுத்தல் மூலமாக புள்ளிகளை இலக்கு மட்டத்திலிருந்து அதிகரிக்க பயிற்சிகள், தொடர் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதேபோல தரம் 6 தொடக்கம் 11 வரை தொடர் மதிப்பிடு , ஆய்வு ரீதியிலான முன்னெடுப்புகள், அடைவுச் செயற்பாடுகள், குறு வினாக்கள், சிறு வினாக்கள், தகவல் தொடர்பு சாதனங்களினூடாக கற்பித்தல், மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தல், அலகுப் பரீட்சை முதலானவற்றோடு சிறந்த செயன் முறைப் பரீட்சைகளையும் முன்னெடுத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆரம்பப் பிரிவுகளில் எழுத்து , வாசிப்பு என்பன மிகவும் உச்சகட்டத்தில் முன்னெடுத்தால் மாத்திரமே பரீட்சை என்ற இலக்கை இலகுவாக அடையமுடியும். பெரும்பாலும் ஆரம்பப் பிரிவுகளில் இவ் வகையான இரண்டு முக்கிய விடயங்களுக்கும் சகலருக்குமான சமத்துவ கற்பித்தல் முன்னெடுக்காத வரைக்கும் பரீட்சையில் சித்தி அடைவோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. இலங்கையில் க.பொ.த சாதாரண தரத்தில் அழகியற் பாடங்களில் மாத்திரமே செயன்முறைப் பரீட்சைகள் காணப்படுகின்றன. தகவல் தொழி;ல் நுட்பம் , தமிழ் இலக்கியம் (இங்கு இயல்,இசை, நாடகம் போன்ற செயன் முறைகளைக் குறிப்பிடலாம்), விஞ்ஞானம் முதலான பாடங்களில் செயன் முறைப் பரீட்சைகள் கிடையாது. இந்நிலையில் எழுத்துக்கான செயற்பாடுகள் நம்பகமானவையாகவும், உறுதிப்பாடுடையதாகவும் காணப்படல் வேண்டும். மாணவர்களின் இயற்கையான கற்பனை ஆற்றலை நல்வழிப்படுத்தி அவற்றை கற்றலுக்கான திசையில் மாற்றத்தைச் செய்ய வேண்டும். பாடசாலைகள் முதலில் வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை நவீனத்துவத்துடனான செயற்பாட்டின் ஊடாக முன்னெடுக்க திடசங்கற்பம் பூணல் வேண்டும். மாணவர்களை இயலாதவர்கள், இயலுமாற்றல் உடையவர்கள், உதவி தேவைப்படுவோர் என வகைப்படுத்தல் ஊடாக கற்பித்தலை முன்னெடுத்தாலும் அவை மாணவனின் மனதைப் பாதிக்காத வண்ணம் அமைதல் வேண்டும். சிறந்த கற்பித்தல் என்பது மாணவனின் மனதை வென்று நம்பிக்கை தருவதாக அமைதலுடன் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு அம்சமாக அமைதல் கூடாது. பாடசாலை முகாமைத்துவக் குழுக்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன காத்திரமன பங்களிப்புடன் மாணவர் அடைவை நோக்கி தம் கவனத்தைச் செலுத்துதலும் இன்றியமையாதது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் க.பொ.த உயர் தரப் பரீட்சையும் எதிர்பார்த்;த அடைவைப் பெற முடியாமல் போன மாணவர்கள் தம் வாழ்க்கையே போய்விட்டதாக எண்ணுவதும் பெற்றார்கள் தம் பிள்ளைகளின் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு அம்சமாகப் பரீட்சையைக் கருதுவதும் இன்று பல மாணவர்களின் தற்கொலைக்கான காரணிகளாக அமைகின்றன. அதே நேரம் தெரிந்தெடுத்த சில் மாணவர்கள் சாதிப்பார்கள் என்ற எண்ணமும் இவர்கள் சாதிக்கமாட்டார்கள் என்ற எண்ணமும் ஆசிரியர்களின் அதி விருப்புக்குரியவர்களாகக் கருதும் நிலையும் இன்றை மாணவர்களின் பரீட்சைகளில் அடைவுகளைப் பெரிதும் பாதிக்கின்றன. மாணவர்களின் கற்றல் அடைவுகள் என்பது வெறுமனே பரீட்சையை மாத்திரம் இலக்காக் கொண்டு அமைவதில்லை. எவ்வளவு படிக்கின்ற மாணவனாக இருந்தாலும் பரீட்சை எழுதும் சூழல், தன்னம்பி;க்கை, உடல் ஆரோக்கியம், அன்றைய உணவு , பரீட்சை நிலையம், பரீட்சை உத்தியோகத்தர்கள் என்பன காரணமாக அமையலாம். எனவே, பரீட்சை இலக்கை அடைய முடியாத ஒரு மாணவனை தோல்விக்கான அடையாளமாக பரப்புரை செய்யக் கூடாது. மாறாக அதற்கான வெற்றிப் பாதையைக் கட்டி எழுப்ப வேண்டியவர்கள் பெற்றாருடன் இணைந்து பாடசாலையும், குறிப்பிட்ட மாணவனும் என்பதே ஆய்வின் இறுதியாகும். உரிய மாணவனின் எதிர்பார்ப்பு, இலட்சியம். தன்னம்பிக்கை, உடற் சுகாதாரம் என்பன வலுப்பெறும் போதும் பரீட்சை என்ற இலக்கை வெல்ல மூளையின் இயக்கம் சரியாக அமையும். இந்த உறுதியான செய்றபாட்டை அனைவரும் இணைந்து மேற்கொண்டால் மாத்திரமே அதனை சரியான இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களின் பரீட்சை வெற்றிவாய்ப்புக்களை அதிகரித்து பல்கலைக்கழகம் செல்வோரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது சகலரினதும் பொறுப்பாகும். இலவசக் கல்வியின் சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்து அதனை மாணவர்கள் வெற்றி கொள்வதற்கான தேவை மிகுந்தால் மாத்திரமே எமது சமூகம் ஒரு கல்வி கற்ற சமூகமாக மலரமுடியும் என்பதே மறுக்கமுடியாத உண்மை ஆகும். மாணவர்களின் வெற்றிக்காக தொடர்ந்தும்..................... இப் பகுதி முடிவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக